பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.
பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன என்பதாகத் தெரியும் இந்த விஷயத்தை முதன்முதலாக ஆவணப்படுத்திய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment