தனது மனைவியை தன்னிடம் இருந்து நித்யானந்தா பிரித்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பெங்களூர் போலீசிடம் அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. அவருடைய பாலியல் சர்ச்சை பற்றிய தகவல்கள் வெளியானதும் இந்த ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இணையதளமும் நிறுத்தப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவர் இந்த ஆசிரமத்தில் சீடராக சேர்ந்து, தனது மனைவியுடன் பணியாற்றி வந்தார். நித்யானந்தா அமெரிக்காவுக்கு வரும்போது பல பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும், நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் கலிபோர்னியா போலீசில் சமீபத்தில் இவர் புகார் செய்தார்.
இந்த நிலையில். “எனது மனைவி ஷியாமளாவை என்னிடம் இருந்து நித்யானந்தா பிரித்தார். எனது திருமண முறிவுக்கு அவர்தான் காரணம். தியான பீட நடவடிக்கைகளில் நான் நேரடியாக பங்கேற்றேன். அவருடைய போதனைகள், அதிகார பலத்தால் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஷியாமளா தற்கொலைக்கு முயன்றார். நித்யானந்தாவால் என் குடும்பத்தையே இழந்தேன். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கர்நாடகா சி.ஐ.டி. போலீசில் டக்ளஸ் புகார் கொடுத்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment