இங்கிலாந்தில் அரசுக்குச் சொந்தமான மறு சுழற்சி நிறுவனம் ஆன ராப் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் வீணாகக் கூடிய உணவுப்பொருட்களைப் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது.
அந்தக் கணக்கெடுப்பில் இங்கிலாந்தில் இந்த ஆண்டு மட்டும் 1 .85 கோடி டன் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பான கேன்கள் வீணடிக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இப்படி வீணாக்கப் பட்ட உணவுப் பொருட்களின் மதிப்பு 1 .17 லட்சம் கோடிகள்.
இங்கிலாந்து உணவு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களால் பெருமளவில் ஆண்டு தோறும் இவ்வாறாக உணவுப் பொருட்கள் வீணடிக்கப் படுவது குறித்து இதை தவிர்பதற்கான ஆலோசனைகளோ அல்லது அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைகளோ அரசின் நடவடிக்கைகளோ இதுவரை காணப்படவில்லை.இவ்விசயத்தில் மக்களிடம் பொறுப்பான நடவடிக்கைகள் தேவை.
ஒரு பக்கம் உணவுப் பொருட்கள் வீணாவதால் உண்டாகும் குப்பைகள் மலை போலக்குவிந்து கொண்டே போவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதோடு வீணாகும் பொருட்களால் பெரும் பொருளாதார நஷ்டமும் அரசுக்கு ஏற்படுகிறது.ஆகவே இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராப் அறிக்கை கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment