நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.
குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.
சோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.இத்தகைய ஒரு இடத்தையை தான் தீவிரவாதி மோடி அரசு ஏழை மக்களிடம் இருந்து பிடுங்கி தங்களுக்கு வேண்டிய பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளது.
இவர்கள் தான் சுதேசி கொள்கை பேசும் ஹிந்துத்துவ கொள்கைவாதிகள் தங்கள் சொந்த ஹிந்து மக்களுக்கே இந்த நிலை என்றால் ஹிந்துக்களே புரிந்து கொள்ளுங்கள் பார்பன உயர்ஜாதி ஹிந்துத்துவாவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment