Mar 27, 2010

சீன மக்களில் அதிகளவானோர் நீரிழிவு நோயினால் பாதிப்பு.

சீன மக்களில் அதிகளவானோர் நிரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் வயது வந்தவர்களில் பத்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும், நோய்த் தன்மை கண்டு பிடிக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த காலங்களைவிடவும் நீரிழிவு நோய் அதிகளவு சீனர்களை தாக்குவதாக லண்டன் மருத்துவ சஞ்சிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.சீனாவில் மொத்தமாக 90 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றினால் நோய் அதிகளவில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.90 மில்லியன் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாகவும், 150 மில்லியன் பேருக்கு நீரிழிவு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.கடந்த பத்து ஆண்டு காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணியெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: