Mar 27, 2010
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் தீவிரவாதி அத்வானிக்கு எதிராக சி.பி.ஐ நீதிமன்றத்தில அஞ்சுகுப்தா சாட்சி.
ராய்பரேலி:1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படும் வேளையில் அதனைத் தூண்டும் விதமாக பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி உணர்ச்சியைத் தூண்டும் உரையை நிகழ்த்தியதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும் சம்பவ இடத்தில் அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகவுமிருந்த அஞ்சுகுப்தா சி.பி.ஐயின் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்வானியும், மற்ற சங்க்பரிவார் தலைவர்களும் இந்த அக்கிரமத்திற்கு தூண்டுகோலாக இருந்ததாகவும், வினய்கத்தியார், சாத்வி ரிதாம்பரா, உமாபாரதி ஆகியோரும் உணர்ச்சியைத் தூண்டும் உரையை நிகழ்த்தியதாகவும் அஞ்சுகுப்தா தெரிவித்துள்ளார்.
பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர்கோவில் கட்டவேண்டுமென்று அத்வானியும், இதர பா.ஜ.க தலைவர்களும் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்ததாக குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். சாட்சியம் கூறியதற்கு பிறகு எதிர்தரப்பு வழக்கறிஞர் குப்தாவை குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை ஏப்ரல் 23 இல் தொடரும்.
நன்றி :தேஜஸ் மலையாள நாளிதழ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment