டெல்லி:தேசிய மனித உரிமை கமிஷனின் போலி என்கவுண்டரின் பட்டியலில் பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 1224 போலி என்கவுண்டரில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டரையும் தேசிய மனித உரிமைக் கமிஷன் சேர்த்துள்ளது.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி டெல்லி பாட்லா ஹவுஸில் நடந்த போலி என்கவுண்டரில் உ.பி. மாநிலம் ஆஸம்கரைச் சார்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களும், போலீஸ் அதிகாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் போலி என்கவுண்டர் என்று பல உண்மை அறியும் குழுக்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ஆனால் காவல்துறையும், அரசும் இதனை ஏற்கவில்லை.
மேலும் இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைக்கமிஷன் விசாரணை நடத்திவிட்டு போலி என்கவுண்டர் நடத்திய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கி போலி என்கவுண்டர் அல்ல எனக்கூறியிருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமை பணியாளர் அஃப்ரோஸ் ஆலம் ஸஹீலின் கடும் முயற்சிக்கு பிறகு பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆதிஃப் அமீன் மற்றும் முஹம்மது ஸாஜித் ஆகிய இருவரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் என்கவுண்டர் போலி என்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைக்கமிஷன் தனது முந்திய நிலைப்பாட்டை மாற்றி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என ஒப்புக்கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment