சீயோல்: கடல் எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த தென்கொரிய கப்பல் நீரில் மூழ்கியதில், 46 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணியில் தென்கொரிய கடற்படை மற்றும் விமானப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வடகொரியாவின் மேற்கு கடல் பகுதியை ஒட்டி, எல்லைப் பகுதியில் தென்கொரிய கடற்படை கப்பலான 'சியோனன்' நேற்றிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில் பேயன்கியோங் தீவுப் பகுதியில் இந்த கப்பல் நீரில் மூழ்கியது. கப்பலில் 104 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 58 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 46 பேரை தேடும் பணியில் தென்கொரிய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.கப்பல் மூழ்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் கிம் யூன் ஹே தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment