Jan 30, 2010

சேது சமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் துவக்கம்.


மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையாக,சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் துவங்கி உள்ள நிலையில், அதற்கான கருவிகளும் மன்னார் வளைகுடா, பாக்., ஜலசந்தியில் பொருத்தப்பட உள்ளன. கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசு சார்பில் சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி தீவிரவாதிகளால் "ராமர் பாலம் பாதிப்பதாக,' எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது."மாற்று பாதையில், திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்யுமாறு,' மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கமிட்டி ஒன்றும் துவங்கப்பட்டது. கமிட்டியின் செயல்பாடுகள் முடங்கி பணிகள் மேம்போக்காக நடந்து வந்தது. இந்நிலையில் மாற்றுப் பாதை கண்டறிந்து திட்டத்தை துவக்கும் பணிகளை, மத்திய அரசு உடனடியாக துவங்கி உள்ளது,திரும்பவும் முழு வேகத்தில் சேது சமுத்திர திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

சிந்திக்க: ராமன் என்பதே ஒரு கற்பனை கதாபாத்திரம், "இல்லாத ராமனுக்கு பாலம்" என்று சொல்லி இந்திய நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் இவர்கள் எல்லாம் தேச துரோகிகள்.

No comments: