வாஷிங்டன்: சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டில் இந்தியாவுக்கு உலக அளவில் 123வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2010ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்பாட்டு இன்டக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு மற்றும் தேசிய இயற்கை வள நிர்வாக சவால்களை சந்திப்பதில் ஐஸ்லாந்து முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 121வது இடம் கிடைத்துள்ளது. பிரேசில், ரஷ்யா ஆகியவை முறையே 62, 69வது இடத்தில் உள்ளன.
யேல் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது. டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டின்போது இது வெளியிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment