தமக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு தான் ஒரு போதும் அடிபணிந்து நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை, என சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர், அரசின் அடாவடிகள்அளவுக்கு மீறி போனால், தனது உயிரை பணயம் வைத்தேனும், அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிட போகிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருப்பதாகவும், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதையும் மக்களுக்கு தெரியப்படுத்த போவதாகவும், தெரிவித்துள்ளார்.
தமக்கு பாதுகாப்பளித்த 90 படை வீரர்களுக்கு பதிலாக தற்போது 4 பொலிஸ்காரர்கள், கைத்துப்பாக்கிகளுடன் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தமக்கு ஆதரவளித்த இராணுவத்தளபதிகளையும், சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில், அரசாங்கம் கைது செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அலுவலகத்தின் பணியாற்றிய 20 ஊழியர்களும் கைது செய்யபப்ட்டிருப்பதாகவும், 23 கணணிகளும், பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தான் வெளியேறாத முடியாத படி தன்னை கறுப்பு பட்டியலிலும், மஹிந்த இணைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment