Jan 30, 2010

சிக்குன் குனியா தடுப்பூசி கண்டுபிடிப்பு!

சிக்குன்குனியா நோய்க்கு புதிய தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் சிக்குன்குனியா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் பரவலாக இந்நோயால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க சுகாதார நிறுவனம், சிக்குன்குனியா நோய்க்கு புதிய தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. குரங்கு, எலி போன்றவைகளுக்கு இந்த ஊசி போடப்பட்டு சோதிக்கப்பட்டதில், அந்நோயால் அவைகள் பாதிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசியை போடுவதன் மூலம் சிக்குன்குனியா நோய் வராது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், மனிதனுக்கு தகுந்த வகையில் இதை மாற்ற முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments: