Jan 16, 2010

3டி "டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்


நியூயார்க் : அமெரிக்காவில் 3டி "டிவி'யை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.மக்கள் பழைய "டிவி'க்களை மாற்றி விட்டு எல்.சி.டி., "டிவி'க்களை வாங்கி வரும் வேளையில், அமெரிக்காவில் தற்போது 3டி (முப்பரிமாண)"டிவி'க்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இவை எல்.சி.டி., "டிவி'க்களை விட இரண்டு மடங்கு விலை அதிகம். அதுமட்டுமல்லாது, இந்த "டிவி'யை அதற் கென தயாரிக்கப்பட்ட மூக்கு கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும்."டிவி'யில் வரும் காட்சிகளை கண்ணுக்கு அருகாமையில் காட்டும் இந்த முப்பரிமாண "டிவி'க்கு அமெரிக்காவில் மவுசு அதிகரித்துள்ளது.எனவே, எல்.சி.டி., "டிவி'க்களை அமெரிக்க மக்கள் தற்போது ஓரம் கட்ட துவங்கி விட்டனர்.

ஈ.எஸ்.பி.என்., சோனி, ஐமேக்ஸ், டிஸ்கவரி போன்ற சேனல்கள் ஒன்றிணைந்து 3டி படங்களை ஒளிபரப்புவதற்கான வரும் ஜூன் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து, உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை இந்த 3டி சேனலில் ஒளிபரப்ப ஈ.எஸ்.பி.என்., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 3டி படங்களை ஒளிபரப்ப சோனி திட்டமிட்டுள்ளது.

No comments: