உலக பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டின் நிறைவில் ஏற்பட்டுள்ள விளைவு, எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த முடிவு அல்ல என்று ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறுகிறார். இரண்டு வார காலம் நடந்த பேச்சுவார்த்தைகளின் இறுதியில் மாநாட்டில் உரையாற்றிய பான் கீ மூன், ஆனாலும் இது அவசியமான ஓர் முதல் படி என வருணித்தார்.
அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் உருவான ஓர் ஒப்பந்தத்தை கவனத்தில் கொள்வதாக மட்டும் கூறி மாநாட்டின் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர்.இந்த ஒப்பந்தம் கண்டு சில ஏழை நாடுகள் கடும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.சட்டப்படி கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமாக இந்த உடன்பாடு அமையாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment