இந்தியாவின் தேசிய பாடலாக இருக்கும் வந்தேமாதரம் பாடலை இந்திய சுதந்திரப் பொன்விழா சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் உணர்சிகரமாக பாடியிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் இதை முஸ்லீம்கள் பாடக் கூடாது என்றும் தியோபந்தி என்ற இஸ்லாமிய அமைப்பு சில மாதங்கள் முன்பு தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது
வந்தே மாதரம் பாடலை பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொறுவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்றும் ஒருவருடைய நம்பிக்கையையும் புரிதலையும் மற்றவர் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடுவதாக அவர் கூறினார்.
விண்ணத்தாண்டி வருவாயா என்ற படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க லண்டன் வந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
assalaamu alaikkum thesa patru enbathu thaimannai vananguvathaal varaathu unmaiyaana thesa patru enbathu thai mannin ovvoru manithargalin kolgai kotbaadugalai mathippathum entha oru manitharaiyum avargal saarnthu irukkum nambikkaiku ethiraaga nirbanthikaamal iruppathe sirantha thesapatru
Post a Comment