கொச்சி:தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல்நாசர் மதானியின் மனைவி சூபியா மதானி தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார்....
பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சூபியா சேர்க்கப்பட்ட உடன் முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, போலீஸ் படையினர் சூபியாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். திரிக்ககரா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்று அவர் ஆலுவா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சூபியாவை விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment