Oct 15, 2009

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

No comments: