
இந்தியாவுக்கு உணவு வழங்குவதற்காக ஒரு பெரிய விவசாயப் பண்ணை எத்தியோப்பியாவில் அமைக்கப்பட்டுவருகிறது.
1970களின் பிற்பகுதி முதலே இந்தியா உணவு உற்பத்தியில் பெரும்பாலும் தன்னிறைவு கண்டுள்ளது என்றாலும், இந்தியாவின் ஜனத்தொகை மிக வேகமாக அதிகரித்துவருவதன் காரணமாகவும், தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளைநிலங்களை தாரைவார்க்க வேண்டிய நிர்பந்தம் காரணமாகவும், சீதோஷ்ண நிலை மாற்றங்கள் காரணமாகவும் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தொடர்ந்து உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் உணவு உற்பத்தி செய்வது என்பதை வரிச் சலுகைகள், குறைந்த வட்டிகளுடன் கூடிய கடன்கள் உள்ளிட்ட பல்வேறு வழிவகைகள் மூலம் இந்திய அரசு ஊக்குவித்துவருகிறது.
No comments:
Post a Comment