Oct 30, 2009

நாசா விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட்க்கு அமெரிக்க நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு.



அமெரிக்க ராணுவ ரகசியத்தை இஸ்ரேல் உளவாளிக்கு விற்பனை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நாசா விஞ்ஞானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிவதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த நாசா விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் (52) கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க ராணுவ ரகசியத்தை 2 மில்லியன் டாலருக்கு இஸ்ரேல் உளவாளிக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி திபோரா ராபின்சன், நாசா விஞ்ஞானிக்கு பிணை வழங்க முடியாது என மறுத்து விட்டார்.

No comments: