
சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை பலமடங்கு அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் சூரிய சக்தியிலிருந்து தற்போது பெறப்படும் மின்சாரத்தின் அளவை அடுத்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய ஆயிரம் மடங்கு அதிகரிப்பதற்கு இந்தியா திட்டமிடுகிறது. இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவானது, இந்தியாவின் பல பெருநகரங்களின் தற்போதைய மின்சாரத் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு இருக்கும். வேகமாக அதிகரித்துவரும் தனது மின்சாரத்தேவைகளுக்கு நிலக்கரியை நம்பியிருக்கும் நிலைமையை குறைக்கவேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது.
No comments:
Post a Comment