Nov 22, 2009

அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்


வாஷிங்டன்:அதிபர் ஒபாமா மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூட்டறிக்கைக்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டின் அதிபர் ஹூ ஜிண்டாவோவை சந்தித்துப் பேசினார்.பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மேம்பட உதவுவதற்கு தங்கள் நாடுகள் தயாராக இருக்கின்றன' என தெரிவித்தனர். இந்த அறிக்கையால் எரிச்சல் அடைந்த மத்திய அரசு, "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கே இடமில்லை' என தெரிவித்தது.இந்தக் கண்டனத்தை அடுத்து, இந்தியாவை சமாதானப் படுத்தும் முயற்சியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது.

No comments: