Nov 22, 2009

நியூயார்க்,மற்றும் லண்டன் கடலில் மூழ்கும் அபாயம்.


பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற் கொண்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கும் போது தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.காற்றில் கார்பன்டை ஆக்சைடின் அளவு உயரும்போது அண்டார்டிகா கடல் பகுதியில் 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகுவது தெரிய வந்தது. இதனால் கடல் நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கடல் நீரின் அளவு உயரும்போது கடற்கரை நகரங்களாக லண்டன், நியூயார்க், மற்றும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது.
எனவே, சுற்றுப் புறம் சூழலையும், வான் மண்டலத்தையும் மாசு படாத அளவில் பாதுகாக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments: