Nov 23, 2009

கொலம்பியாவில் எரிமலை வெடித்தது

அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா நாட்டில் எரிமலைகள் உள்ளன. தென் கொலம்பியாவில் உள்ள “கேலராஸ்” எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது.
எனவே கரும்புகையுடன் நெருப்பு குழம்பு வெளியேறியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கின்றனர்.

ஆகவே அங்கு மக்கள் உஷார்படுத்தப்பட்டனர். எரிமலை வெடிப்பதற்கு முன்பு கரும்புகை வெளி யேறும்போதே ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.இவர்கள் அனைவரும் நாரினோ நாட்டில் உள்ள பாஸ்டோ நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பதற்கு முன்பே மக்கள் வெளியேறியதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எரிமலை வெடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு கேலராஸ் எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். ஹுய்லா எரிமலை கடந்த 2008-ம் ஆண்டு வெடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

No comments: