Nov 18, 2009

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் எல்லா அரசு துறைகளிலும் வூடுருவி விட்டார்கள்: ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே.


மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவரே படு சாதாரணமான முறையில் கொல்லப்பட முடியும் என்றால், இந்த நாட்டில், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? என்று முகத்தில் அடித்தாற் போல கேட்டுள்ளார் மும்பை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே.

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தான் காரணம் என்பதை என்கணவர் கண்டுபிடித்ததால் என்னுடைய கணவரின் உயிரை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் பறித்துவிட்டார்கள் என கடுமையாக குற்றம்சாட்டினார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒய்.பி. சிங் மற்றும் அவரது மனைவி அபா ஆகியோர் இணைந்து காவல்துறையில் ஊழலை விரட்டுவதற்காக இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.யஹி சச் ஹை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை இன்று கவிதா கர்கரே வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் படு சாதாரணமாக கொல்லப்பட்டுள்ளார். அவரை இவ்வளவு சாதாரணமாக கொல்ல முடிகிற அளவுக்கு அவருக்கான பாதுகாப்பு இருந்துள்ளது. அப்படியானால் இந்த நாட்டில் உள்ள அப்பாவி பொதுமக்களின் நிலை என்ன?, அவர்களது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

கர்கரே காயமடைந்த நிலையில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. காமா மருத்துவமனை வளாகத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடமாக எனது கணவரும், காம்தே, சலஸ்கர் உள்ளிட்டோரும் உதவி கிடைக்காமல் துடித்துள்ளனர். ஏன் அவர்களுக்கு யாரும் உதவவில்லை. ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் எல்லா அரசு துறைகளிலும் வூடுருவி விட்டார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இனி இந்தியாவை யாராலும் காப்பாத்த முடியாது என கண்ணீர் ததும்ப கூறினார்.

No comments: