Nov 18, 2009
இந்தியாவின் பொருளாதாரம் அழிவு வழியில் பயன்படுத்தபடுகிறது.
இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் கட்டப்பட்டுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பலை டிசம்பருக்குள் ஒப்படைக்க ரஷியா முடிவெடுத்துள்ளது. நெர்பா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது. கப்பல் தற்போது அமுர் கப்பல் கட்டும் தளத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால்தான் இந்தியாவிடம் கப்பல் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனினும், டிசம்பருக்குள் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் எப்படியும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று கபாரோவ்ஸ்க் ஆளுநர் வியாசெஸ்லேவ் தெரிவித்தார்.
நெர்போ அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் 10 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு அளிக்கப்படும். இதற்கு இந்தியாவிடம் இருந்து ரூ.3250 கோடியை ரஷியா பெற்றுக்கொள்ளும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment