Sep 3, 2012

கலவரம் நடத்தி உயிர்களை கொன்ற பெண் மருத்துவர்!

Sep 04: குஜராத் இனப்படுகொலையின் போது பெண்கள், குழந்தைகள் உள்பட97 முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தவர்களுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடுச் செய்யவேண்டும்.
 

2002 குஜராத் இனப்படுகொலையில் மிகவும் கொடூரமான கூட்டு படுகொலைதான் நரோதா பாட்டியாவில் நடந்தது. இதன் தீர்ப்பு இப்பொழுது  வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானி என்பவருக்குத்தான்  28 ஆண்டுகள் கடும்காவல் சிறையும், பாபு பஜ்ரங்கி என்பவருக்கு சாகும்வரை சிறையும் என்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பதில் என்று நடத்தப்பட்ட இந்தப் படுகொலையில் ஒரு இடத்தில் மட்டும் கூட்டாக கொல்லப்பட்ட முஸ்லிம்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீவி என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.

சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின், சகோதரர்களின் கண் முன்னே ஹிந்துத்துவா வெறியர்களால் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டனர். இப்படி பெண்களை கற்பழித்த இந்த கொடூர செயலை முன்னின்று நடத்தியது யார்தெரியுமா? அவர்தான் நரேந்திர மோடியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் மாயா கொத்தானி. இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பழிவாங்க நடந்த கலவரம் என்று சங்க்பரிவார்கள் அளித்த விளக்கத்தை முற்றிலும் நிராகரித்த நீதிமன்றம் நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை முன்னரே திட்டமிட்டு தயார் செய்த சதித் திட்டம் என்று கூறியது. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையிலும் இவ்வழக்கில் நீதி கிடைக்க போராடிய சமூக நீதி போராளி வழக்கறிஞசர் தீஸ்தா ஸெடல்வாட் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

வழக்கமாக கலவர வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவது இல்லை. முதன் முறையாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு ஹிந்துத்துவா வகுப்புவாத வெறியை கட்டுப்படுத்தவும், சங்க்பரிவார சக்திகளை தளர்த்தவும் உதவும். உயர் கல்வி என்பது ஹிந்துத்துவா மதவெறிக்கு ஒரு தடையில்லை என்பதை மகப்பேறு டாக்டரும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான மாயா கொத்னானியின் செயல் நிரூபிக்கிறது. இதுபோன்ற தருணங்களில்தான் நாம் மிகவும் விழிப்போடு இருந்து மனித நேயம் காட்க்க வேண்டும்.
மனித நேயம் காப்போம்! மதவெறி ஒழிப்போம்!


1 comment:

Anonymous said...

she is women too. how can see do that. Hiduthuva its really very dangerous. i never heard about one doctor make riots.