Oct 27, 2009
குளோனிங் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிக்கு தண்டனை
தென்கொரியாவில் குளோனிங் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானியை குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்கொரியாவின் பிரபல விஞ்ஞானியான ஹவாங் வூ - சுக் என்பவர்,குளோனிங் ஆராய்ச்சியில் - குறிப்பாக " ஸ்டெர்ம் செல் " தொடர்பாக தாம் முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பதாக அறிவியல் பத்திரிகை ஒன்றில் கடந்த 2004 ஆம் ஆண்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
இதனையடுத்து அவரது கண்டுபிடிப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டு,அது தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.அவர் வெளியிட்ட சில ஆராய்ச்சி தகவல்கள் போலியானது என்பது தெரிய வந்தது.
இருப்பினும் தனது ஆராய்ச்சிக்காக தென்கொரிய உயிரியல் வரைமுறை சட்ட விதிகளை மீறி மனித முட்டைகளை ஆராய்ச்சிக்காக வாங்கியதாக அவர் மீது குற்றம்சாற்றப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,விஞ்ஞானி ஹவாங் வூ - சுக்கை குற்ற்வாளி என்று தீர்ப்பளித்தது.
அதே சமயம் அவருக்கான நான்கு ஆண்டு தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment