Dec 2, 2015

மாட்டுகார வேலா மனுசனை கொஞ்சம் பாருங்கடா!


சிங்கார சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் திசைதெரியாமல் தடுமாறி கிடக்கும் இந்த நேரம் நமது மாட்டை பாதுகாக்கும் கூட்டம் எல்லாம், மாட்டுகார வேலா என் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடா! என்று சுகமாக, உல்லாசமாக இருக்கிறார்கள்.

இவர்கள் யாரை பார்த்து தீவிரவாதி வீடு கொடுக்க கூடாது, அவர்கள் கடைகளில் பொருள்கள் வாங்க கூடாது என்று சொன்னார்களோ அந்த முஸ்லிம் மக்கள்தான் பெரும் அளவில் சென்னை மீட்ப்பு பணிகளில் களம் இறங்கி உள்ளனர். சுன்னத் ஜமாஅத், பாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா (PFI ), சோசியல் டெமாகரடிவ் பார்டி ஒப் இந்தியா (SDPI), தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தவ்கீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாஅத், போன்ற அமைப்புகளின் தொண்டர்களும், அவர்களின் ஆம்புலன்ஸ் களும் மிகவும் சிறந்த முறையில் மீட்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேற்கூறிய இயக்கங்களின் அலுவுலகங்கள், தமிழ் நாடு ஹஜ் கமிட்டி கட்டிடம், சென்னையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் 24 மணி நேரமும் மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. அங்கே மக்கள் பெரும் அளவுகளில் தங்கவைக்கப்பட்டு, உணவளிக்கபட்டும் வருகிறார்கள். இத்தோடு இவர்கள் மருத்துவ குழுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார்கள் என்பது சிறப்பான விடயமாகும்.

*இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மாட்டுகாக குரல் கொடுக்கும் சுப்பிரமணிய சுவாமி சென்னை மக்களுக்கு மத்திய அரசு உதவ கூடாது என்று கேட்டு கொண்டு தான் கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறிதான் என்பதை தெள்ளதெளிவாக வெளிப்படுத்தி கொண்டார்.*

*சுப்பிரமணிய சாமியின் கூட்டாளி காக்கை சித்தர் கல்யாண ராமன் மதவெறி தலைக்கு ஏறிய முக நூலில் கூறி இருக்கும் கருத்தை பாருங்கள்.*
*மலர் விழி*

1 comment:

Anonymous said...

பாகிஸ்தானுக்கு போக சொன்ன பாய்கள் எல்லாம் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் இராணுவமாய் களத்தில் உள்ளனர்
அவர்களை போக சொன்ன ஆர்எஸ்எஸ் சேவை செம்மல்கள் எங்கே ஏதும் சேத்தில் சொம்பை தேடிகொண்டு உள்ளீர்களோ?
சீக்கிரம் சேவை பன்னுங்கப்பா வெள்ளமே வெறுத்து போக போது..
சாயம் வெளுத்த சங்கபரிவாரமே பாம்புவிஷ பாசிச பாஜகவே
சிதைந்துபோன சிவசேனார்களே
இந்துவும் முஸ்லிமும் வெள்ளத்தால் இணைந்தவர் அல்ல உள்ளத்தால் இணைந்தவர்கள் ... இது வெறும் உறவு பந்தமல்ல உயிர் பந்தம்...சிற்பி இதழ்