Nov 17, 2015

கார்பரேட் கொள்ளையனின் பதஞ்சலி நுாடுல்ஸ்!

யோகா குரு என்று நாட்டை ஏமாற்றும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத, உடனடி நுாடுல்ஸ் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதஞ்சலி நுாடுல்சில், காரீயம், ரசாயன உப்பு ஆகியவை கலக்கப்பட வில்லை. உடல் நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இதை தயாரித்துள்ளோம். பிற நிறுவனங்களின் நுாடுல்ஸ்கள், பாமாயில் பயன்படுத்தி, தயாரிக்கப்படுகின்றன.எங்கள் நுாடுல்ஸ், அரிசியின் தவிட்டில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

70 கிராம் எடையுள்ள பாக்கெட், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள், நாடு முழுவதும் இந்த நுாடுல்சை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், தயாரிப்பு மையங்களை அமைத்துள்ளோம். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவ் ஒரு கார்பரேட் கொள்ளைக்காரன், சைக்களில் வலம் வந்த ஏழை ராம்தேவ் ஊழல், மோசடி, பொய், பித்தலாட்டம் என்று அத்தனை மொள்ளமாரி, முடிச்சவுக்கி வேலைகளையும் செய்து இன்று உலக பணக்காரர்களில் ஒருவன். சைக்களில் வலம் வந்த ராம்தேவ் இன்று ஹெலிஹாப்டரில் வலம் வருகிறார்.  இந்த போலி சாமியாருக்கு அமெரிக்காவில் சொந்தமாக ஒரு தீவும், சொகுசு பங்களாக்களும், உல்லாசம் புரிய பக்தைகளும் இருக்கிறார்கள். கார்பரேட் கொள்ளையனுக்கு மக்கள் மேல் ஏன் இந்த திடீர் அக்கறை. 

இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு ஏன் இந்த திடீர் அக்கறை. மேகி நூடுல்ஸ் உலக தரம் வாய்ந்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இது விற்பனை செய்யப்படுகிறது. நரேந்திர மோடியின் ஹிந்துத்துவா ஆதரவாளரான பாபா ராம்தேவின் நூடுல்சை பறந்து விரிந்த இந்த சந்தையில் விற்பனையை தொடங்கவே மேகிக்கு அவசர தடை பிறப்பிக்க காரணம். மொத்தத்தில் இயற்க்கை உணவை தவிர இதுபோல் உள்ள எல்லா ரெடிமேட் உணவுகளும் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியதே. மேகி நூடுல்ஸ் குறித்து ஒரு பயத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கி அதற்க்கு மருந்தாக ராம்தேவ் நூடுல்சை சாபிடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது மோடி அரசு. 

சிந்திக்கவும்: பாபா ராம்தேவ் என்ன ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ ஆயுர்வேத மருந்துக்களை கொடுக்க பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று நினைக்க வேண்டாம். சித்த வைத்தியம், ஆயுர் வேத வைத்தியம் என்கிற பெயரில் ஒரு கொள்ளை கூட்டம் மக்களை கொள்ளை அடிக்கிறது. ஞனிகள், சித்தர்கள், மேதைகள் இந்த உலகிற்கு கற்றுத்தந்த வைத்திய முறைகளை, கண்டுபிடிப்புகளை வைத்து இதுபோன்ற கொள்ளைகார கூட்டம் கொள்ளையடிக்கிறது. இதில் சேவை ஒன்றும் இல்லை.  

1 comment:

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்