Jul 24, 2011

தலித் கிறிஸ்தவர்கள் 4 நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பேரணி!

JULY 25, தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி டெல்லியில் நாளை முதல் 4 நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பேரணி நடத்தப் போவதாக தலித் கிறிஸ்தவர்களுக்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கர்த்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சின்னப்பா, ஆயர் பேரவை எஸ்சி, எஸ்டி பணிக்குழு ஆணையர் பிஷப் நீதிநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியிலில் சேர்க்க வலியுறுத்தி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நாளை முதல் 27ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டமும், 28ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்களும் 100 கத்தோலிக்க ஆயர்களும், இஸ்லாமிய சிறுபான்மை அமைப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.

இதையொட்டி, தமிழகத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், வீடுகளில் சிறப்பு பிராத்தனை நடைபெறுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது.

No comments: