Jul 24, 2011

இந்தியாவின் பணம் வெளிநாட்டு வங்கிகளில்!

JULY 25, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் மட்டும் இந்தியர்களின் பணம் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பதாக அந்த நாட்டு தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி தலைவரின் செய்தி தொடர்பாளர் வால்டர் மெய்யர், ’’சுவிட்சர்லாந்தில் உள்ள பெரிய வங்கிகளான யு.பி.எஸ். மற்றும் கிரெடிட் சுவிஸ் ஆகிய இரண்டு வங்கிகளிலும் அதிக அளவில் இந்தியர்கள் பணம் போட்டுள்ளனர்.

இந்த வங்கிகளுடன் சேர்த்து சுவிஸ் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் மொத்தமாக கணக்கிட்டால் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இந்தியர்களின் பணம் உள்ளது. இது, 2010-ம் ஆண்டு நிலவரப்படியான கணக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: இந்தியாவில் உள்ள பணக்கார கொள்ளையர்கள் வெளிநாட்டில் வங்கிகளில் இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்து சந்தோசமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த துரோகிகளை பிடித்து அந்த பணத்தை கைப்பற்றி ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

6 comments:

அம்பாளடியாள் said...

ஆகா இவ்வளவு தொகையா!...பணம் போட்டவர்களுக்கு
இந்த உண்மைத்தகவல் வெளிவந்ததும் எவ்வளவு பெரிய
அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்?...ஏழைகளின் வயிற்றில்
அடித்த பணமாயின் நிட்சயமாக அது ஏழைகளையே
சென்றடையும்.பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

சட்டபூர்வமாக என்ன செய்ய இயலும்?

இந்தப் பணத்தை ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் எப்படி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முடிந்திருக்கும்?

ஏதோ தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற கதை மாதிரி தெரிகிறதே!

Anonymous said...

என்ன சகோதரி அம்பாளடியால் அவர்களே! 11 ஆயிரம் கோடியை ஆஹா என்று ஆச்சரியப்படுகிறீர்கள்?
இது 5 % கூட அல்ல என்பது என் கணிப்பு. இதைக்கூட அந்த அரசியல் கள்வர்களின் மற்றும் நாட்டை
வரி ஏய்ப்பு செய்து கொள்ளை அடித்த தொழில் அதிபர்களின் அனுமதியோடுதான் சுவிஸ் பாங்கும்
இதை வெளி இட்டிருக்கும். இப்பொழுதெல்லாம் ஊழல் என்றாலே 1 லட்சம் கோடிக்கு குறைவாக
வருவதே இல்லை. 65 வருடங்களாக நாட்டை கொள்ளை அடித்த இந்த திருட்டுக்கும்பலின் மொத்தம்
இவ்வளதான் என்பதை நான் நம்பவே மாட்டேன். Muhammed Thameem

Anonymous said...

டாக்டர் கந்தசாமி அவர்களே! வெளிநாடுகளில் இந்த அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் நிறைய்ய்ய்ய நிறுவனங்களும், தொடர்புகளும் உள்ளன. அந்த தொடர்பில் பெரும் பணங்களை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நம் சொந்த நாட்டில் அவர் சம்பத்தப்பட்டவரிடம் இந்தியாவில் கொள்ளை அடித்ததை கொடுத்துவிடுவர்.

அவரிடம் வெளி நாட்டில் வாங்கும் பணத்தை தனது வெளிநாட்டு நிறுவனத்தை வளப்படுத்துவதில் உபயோகப்படுத்திக்கொள்வார்கள். அப்படித்தான் வெளிநாடுகளில் தீவுகள் வாங்கிக்கொள்வதெல்லாம்.

முன்பு இந்தியாவின் வட மாநிலங்களில்தான் இது அதிகமாக இருந்தது. இப்பொழுது வட நாட்டு

சேட்டுமார்கள் தமிழகத்துக்குள் அதிகமாக வந்து சினிமா துறை, தொழில் துறை, பணமாற்று, கந்து வட்டி மற்றும் இதர தொழில்களில் கோலோச்சுவதெல்லாம் இப்படித்தான்.

ஏன் இந்தியாவின் தேசபற்று மிக்க தலைவராக கருதப்படும் அத்வானிக்கு ஜப்பானில் மிகப்பெரிய இரண்டு ரெஸ்டாரண்டுகள் உள்ளன. ஓன்று தலைநகர் டோக்யோவின் மத்திய பகுதியான ஷிஞ்சிகுவிலும், மற்றொண்டு டோக்யோவின் மற்றொரு பகுதியான ஒகாச்சிமச்சி யிலும். நம் தேசத்தை மதத்தின் பெயராலேயே நாசம்
செய்கிறார்கள் ஐயா.

- Muhammed Thameem

Anonymous said...

பாகிஸ்தான் இந்திய ரூபாய்களை தனது பிரிண்டிங் பிரஸிலேயே அடித்து பல லட்சம் கோடி இந்திய பணத்தைசுருட்டியிருக்கிறது என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது. முஸ்லீம்களே இப்படித்தான். மற்றவனை ஏமாற்றியே பிழைப்பு நடத்துவார்கள். ஹசன் அலி அடித்த பல லட்சம் கோடி, அப்துல் கரிம் டெல்கி போன்றோர் அடித்த பல லட்ச்ம் கோடி எல்லாம் பொதுமக்கள் வயிற்றில் அடித்து பண்ணாமல் அல்லாவா குடுத்தார்?