தந்தி டிவி ஆதித்தனார் குரூப்புக்கு சொந்தமா? இல்லை RSS குரூப்புக்கு சொந்தமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தந்தி டிவியில் ஆயுத எழுத்து என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே என்கிற (RSS பாண்டே) சிறுபான்மை மக்களுக்கு எதிரான தனது ஹிந்துத்துவா மதவாத நச்சு கருத்துகளை தொடர்ந்து கக்கி வருகிறார். அதுபோல் ஈழத்தமிலர்களுக்கும், தமிழர் எழுச்சிக்கும் எதிராக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பேசுவதற்கு இந்த தரங்கெட்ட டிவி மேடை அமைத்து கொடுக்கிறது. பொய்களை அரியணை ஏற்றி உண்மைகளை குழிதோண்டி புதைக்க ஆயுத எழுத்து என்கிற பொய்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அந்த வருசையில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரனுக்கு இழைக்கப்பட்டது மிகப்பெரும் அநீதி. அவர் தனது மத (முஸ்லிம்) அடையாளங்களைத் துறந்து மைய நீரோட்டத்தில் பயணிப்பவர். வெகுஜனமக்களுக்காக எழுதுபவர், பேசுபவர். அப்படிப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் நிறுத்துவதும், பயங்கரவாதியாக சித்தரிப்பதும் மிகப்பெரும் வன்முறை.
விவாதத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள், மனுஷ்யபுத்திரனை வேட்டையாடியதை, நெறியாளர் ஹரிஹரன் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பருந்துக்கும் கோழிக்கும் மையமாக நடந்து கொண்டார். புதிய தலைமுறையில் ஞாநியை, ஒரு பாசிஸ்ட் பகிரங்கமாக மிரட்டினான். நியூஸ் 7 விவாதத்தில்ஆளூர் ஷாநவாஸ் மோடியை விமர்சித்ததற்காக, அந்த டிவிகாரர்களுக்கு போன் போட்டு பாரதிய ஜனதா கட்சி எச்.ராஜா மிரட்டினான்.
தந்தி டிவி பெரும்பாலும் இந்துத்துவ சக்திகளை எதிர்க்கும் இடத்தில், வலுவற்ற கருத்தாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. தேசிய லீக் பஷீர், ஜவஹர் அலி போன்றோரை எங்கிருந்துதான் தேடிப் பிடிப்பார்களோ தெரியவில்லை. ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு சரியான பதில் கொடுக்கும் மக்கள் கலை இலக்கிய கலை, மற்றும் திராவிட கழக தோழர்கள், பாபுலர் பிரான்ட், எஸ்.டி;பி.ஐ. கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்புனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்களை இந்த தந்தி டிவி அழைப்பதில்லை. யாரன்று அறிப்படாத பொது விவாதங்களில் அந்த அளவுக்கு அறிவு முதிர்ச்சி இல்லாத நபர்களை அழைத்துவந்து ஹிந்துத்துவா தீவிரவாத சக்திகளுக்கு வலுசேர்க்கும் காரியங்களை தந்தி டிவி செய்து வருகிறது. தமிழக மக்களே தந்தி பத்திரிக்கை மற்றும் டிவியை புறக்கணிப்போம்.
No comments:
Post a Comment