Jul 31, 2015

இந்தியாவின் நீதி துறை காவிதுறையாகிவிட்டது!

இனியும் காந்தி தேசம் என்று இந்தியாவை சொல்லாதீர்கள், அப்பாவிகளை மட்டும் கொலை செய்யும் ஓநாய் தேசம், 
மனுநீதியை நிறைவேற்ற, ஹிந்துத்துவாவை தூக்கிபிடிக்க நீதி மற்றும் அரசு அதிகாரங்கள் துணை நிற்கின்றன. 

மனு நீதியின் ஆணைக்கிணங்க கூட்டு மனசாட்சியால் கொல்லப்பட்டவனின் இறுதி ஊர்வலத்தில் பல இலட்சம் மக்கள் கூடினார்கள். இதை திட்டமிட்டு பார்பன ஹிந்துத்துவா மற்றும் அதிகார வர்கத்தின் மீடியாக்கள் மறைத்தன. 

மும்பை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்கிறீர்களே, அதற்கு முன் 1992-93 மும்பை கலவரம், பாபர் மசூதி இடிப்புகலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி வேண்டாமா?
இவ்வளவிற்கும் அவர் மும்பை குண்டு வெடிப்பில் கடுகளவு கூட சம்பந்தப்படவில்லை. அவரது அண்ணன் நடத்திய சதி தெரிந்து சொல்லணாத் துயரம் கொண்டதனாலேயே இங்கு குடும்பத்துடன் சரணடைந்து இறுதியில் உயிர் விட்டார்.
தூக்கில் தொங்கும் இறுதி விநாடியில் கூட தான் குற்றவாளியில்லை என்று கடவுளை தொழுதவாறே இறந்து போயிருக்கிறார். கடைசியாக பார்த்த வழக்கறிஞரிடமும் தனது அண்ணனது பாவத்திற்காக தூக்கில் தொங்கப் போவதாக கூறியிருக்கிறார். 
வழிய வந்து சரணடைந்த ஒரு நபரை 20 ஆண்டுகள் சிறையில் அடைத்து பின்னர் தூக்கில் இடுவது அதுவும் தூக்கு தண்டனையை  கடுமையாக எதிர்த்து வந்த அப்துல் கலாமின் இறப்பு அன்றே அவசர அவசரமாக யாகூப் மேமன் தூக்கில் இடப்பட்டது கலாமின் சிந்தனைகளை அவமதிப்பதாகும். மொத்தத்தில் யாகூப் மேமனின் தூக்கு இந்தியாவின் நீதி துறை காவிதுறையாகிவிட்டது என்பதை மீண்டும் தெள்ளதெளிவாக உணர்த்தி இருக்கிறது.

No comments: