Apr 11, 2014

விழிப்புணர்வு பதிவு! ஒரு உண்மை!?

எனக்கு தெரிந்த ஒரு  பெண் அவர்கள் கணவருக்கு AIDS தோற்று ஏற்பட்டுவிட்டது அதன்மூலமாக அவர் மனைவிக்கும் பரவிவிட்டது பாவம் அதன் பின்தான் அவர்களுக்கு AIDS இருப்பதே தெரியவந்தது அதன்பின் அதற்கான மருத்துவம் எடுத்துவந்தனர். இதுவெல்லாம் 6-7 வருடங்களுக்கு முன் நடந்தவை.

அந்த பெண் சில நாட்களுக்கு உடல் நிலை திடீரென சரி இல்லாமல் போக வழக்கமாக போகும் மருத்துவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட அவசர நிலையில் அருகில் இருக்கிற மருத்துவரை அணுகி இருக்கிறார் அந்த மருத்துவரும் பார்த்துவிட்டு அதற்கான மருந்து எழுதும் நேரத்தில் மருத்துவரிடம் உண்மையை சொல்லவேண்டும் என்பதற்காக தனக்கு AIDS இருப்பதாய் சொல்லி இருக்கிறார் உடனே அந்த மருத்துவர் தகாத வார்த்தைகளாலும்,மிகவும் கீழ்த்தரமாகவும் பேசி மருத்துவம் பார்க்க மறுத்து அனுப்பிவிட்டாராம் அந்த பெண் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

இது போன்ற மருத்துவர்களுக்கு AIDS இருப்பவர்கள் எல்லோரும் தவறான வழியில் போனவர்கள் அல்ல இது போன்று ஒன்றும் அறியாத அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் காரணம் அறியாமல் இப்படி அவர்கள் மனதை புன்படுத்திவிடாதீர்கள் அது போல்தான் மற்ற பொது மக்களும் AIDS உள்ளவர்களை காரணம் தெரியாமல் திட்டிவிடாதீர்கள் அவர்கள் தங்கள் வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருப்பவர்கள்.

1 comment:

Seeni said...

வேதனை..