Apr 19, 2014

மோடியின் முகமும் முகாமும் கலக்கத்தில்!?

குஜராத்தின் வளர்ச்சியை இங்கே வந்து பார்த்தீர்களா ? அதன் உள்கட்டமைப்பை யாராவது வந்து பார்த்தீர்களா ? நரேந்திர மோடியின் சாதனையை நேரில் வந்து பார்த்தீர்களா ? என்றெல்லாம் குதித்தார்கள். சரி, நான் வந்து நேரில் பார்க்கிறேன் என்று ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கிளம்பி போனார். ஆனால் அவர் குஜராத் போலிசார் நடுவழியிலேயே தடுத்தார்கள். அவரை மேலே செல்ல அனுமதிக்க மறுத்தார்கள். 
மேலும், தான் ஏறிக் கொள்ளும் மேடைகளிலெல்லாம் "குஜராத்தின் வளர்ச்சியை பற்றி என்னுடன் விவாதிக்கத் தயாரா? ராகுல் காந்தி தயாரா? ராகுல் காந்தியின் தாயார் தயாரா ? பிரதமர் மன்மோகன் சிங் தயாரா ? மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தயாரா ? என்றெல்லாம் நரேந்திர மோடி சவால் விடுவார். அவர்கள் வரமாட்டார்கள். நான் உங்களுடன் விவாதிக்க தயார் ! என்று சொல்லி அர்விந்த் கேஜ்ரிவால் நரேந்திர மோடியின் இல்லத்துக்கே போனார். மிரண்டு போன நரேந்திர மோடி அவரை தனது வீட்டு தெருமுனையிலேயே காவல்துறையை விட்டு தடுத்து அனுப்பினார்.

இப்போது வாரணாசியிலே தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டார் நரேந்திர மோடி. இந்தியாவுக்கு பிரதமர் வேட்பாளராக உங்களை சொல்லிக் கொள்வதால் குஜராத்துக்கு வெளியே தேர்தலில் போட்டியிட்டு உங்கள் வெற்றியை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்று எதிர் சாவல்கள் வந்த காரணத்தால், உத்திரபிரதேசத்தின் வாரணாசியிலே தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். இருந்தும் மனதில் தோன்றிய பயம் காரணமாக இரண்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். அதுவும் அவர் குடும்பத்தின் ஆஸ்தான ஜோதிடர் அறிவுரையின்படிக்கு நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதியின் பெயர்கள் வெற்றியை குறிக்கும் ' V' என்ற எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதால் 'Varanasi' ,'Vadodara' ஆகிய தொகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார். இப்படியாக அவர் ஏறுக்குமாறாக செயல்படுவதன் மூலம், மோடி அலை என்று எதுவும் வீசவில்லை என்பதை நமேகேல்லாம் சொல்லாமல் சொல்லி விட்டார்.

நரேந்திர மோடியை எதிர்த்து நான் போட்டியிடுவதா வேண்டாமா என்பதை பற்றி வாரணாசி மக்களிடமே கேட்டு நான் முடிவு செய்வேன் என்று சொல்லி, நேற்று வாரணாசியிலே பேரணி நடத்திய அரவிந்த் கேஜ்ரிவால் மீது முட்டையும், மையையும் வீசி தங்கள் ஜனநாயக பொறுப்புணர்வை பாரதிய ஜனதா கட்சியினர் வெளிப்படுத்தினர் . 'எப்போது என் மீது முட்டையும் மையும் வீசப்பட்டதோ, அப்போதே நான் வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி இடுவது என்று முடிவு செய்து விட்டேன்' என்று கெஜ்ரிவால் அறிவித்து விட மோடியின் முகமும், முகாமும் கதிகலங்கி போய் இருக்கிறது. 

மேலும் குஜராத்தை நரேந்திர மோடி எங்கே ஆட்சி செய்கிறார்? அம்பானியும் அடானியும் தானே குஜராத்தை ஆள்கிறார்கள். அவர்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு, நரேந்திர மோடி வெறும் 'கமிஷன்' அடித்துக் கொண்டு இருக்கிறார். குஜராத்தின் நகர் புறங்களில் ஓரளவு முன்னேற்றம் இருக்கிறது தவிர, குஜராத்தின் உள்ளார்ந்த கிராமங்களில் பசியும், பட்டினியும் தலை விரித்து ஆடுகிறது. மக்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. ஊட்ட சத்து அற்ற தாய்மார்களும், குழந்தைகளும் தான் இருக்கிறார்கள். சாதியம் பேய் போல தலைவிரித்து ஆடுகிறது. மதங்களுக்கிடையேயான வெறுப்பு உணர்ச்சிகள் கொந்தளித்து இருக்கிறது. பிறந்து விட்டோம், ஆக ஏதோ வழுந்து விட்டோம் என்ற மனநிலையில் மக்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

'நரேந்திர மோடிக்காக மட்டுமே பாரதிய ஜனதா' என்பது போல அந்தக் கட்சியின் மற்ற தலைவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்படுகிறார்கள். மூத்த தலைவர் அத்வானிக்கே சீட்டு மறுக்கப்படுகிறது. அவர் தகராறு செய்த பின்னர் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படுகிறது. அதுவும் அவர் கேட்ட தொகுதி தரப்படாமல் இவர்களாக ஏதோ ஒன்றை அவரிடம் வலிய கொண்டு திணிக்கிறார்கள். அத்வானி ஜெயித்து வரக்கூடாது என்கிற எண்ணம் யாருக்கோ இருக்கிறது. இதுபற்றி நெற்றி கெஜ்ரிவால் பேசும்போது, "அத்வானியை நரேந்திரமோடிக்கு பிடிக்காது தான், நரேந்திரமோடிக்கு அத்வானியை பிடிக்க வேண்டுமானால் அவர் தன் பெயரில் உள்ள 'V' என்ற எழுத்தை விட்டுத் தொலைக்க வேண்டும். அப்படி விட்டு விடுவாரேயானால் அவரது பெயர் 'Advani ' என்றில்லாமல் 'Adani ' என்று மாறி விடும். அடானியை தான் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடிக்குமே !" என்று சொன்னார். அதைக் கேட்டு அங்கே சிரிக்காதவர்கள் இல்லை ! 

குஜராத்தின் வளர்ச்சி நேரில் பார்த்தீர்களா ? நரேந்திர_மோசடி?.