செப் 10/2013: லக்னோ: உ.பி.,யில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, ஏழு மாநிலங்களில், கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதனால், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அந்த மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.
உ.பி.,யின், முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில், ஜாட் இனத்தை சார்ந்த இளம் பெண் ஒருவரை, கேலி செய்ததாக கூறி, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை தாக்கினர். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக மாறியது.
மற்ற மாவட்டங்களுக்கும், கலவரம் பரவியது. தீ வைப்பு, கத்தி குத்து, துப்பாக்கிச் சூடு என, முசாபர் நகர் மாவட்டம் முழுவதும், போர்க்களமாக மாறியது.இந்த கலவரத்துக்கு, நேற்று வரை, 31 பேர் பலியாகி விட்டனர். ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளிட்டோர், கலவர பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில், ராணுவத்தினர், கொடி அணிவகுப்பு நடத்தினர். ஆனாலும், கலவரம் கட்டுக்குள் வரவில்லை.நேற்றும், பல இடங்களில் கலவரம் நீடித்தது. கலவரத்துக்கு பயந்து, கிராம மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.
கலவரம் நடந்த பகுதிகளில் பணியாற்றிய, உயர் போலீஸ் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கலவரத்தை தூண்டும் வகையிலான வீடியோ காட்சிகளை, இணையதளத்தில் வெளியிட்டதாக கூறி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், குகும் சிங், சுரேஷ் ராணா, பர்தேந்து, சங்கீத் சோம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்., முன்னாள் எம்.பி., ஹரேந்திராவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து, கலவரத்தில் ஈடுபட்ட 1,000 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவர பகுதிகளில், போலீசார், வீடு வீடாகச் சென்று, சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கத்திகள், துப்பாக்கிகள் உட்பட, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த கலவரம், பீகார், ராஜஸ்தான், ம.பி., கர்நாடகா, அரியானா, காஷ்மீர் உட்பட, ஏழு மாநிலங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், சம்பந்தபட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோடியை பிரதமராக கொண்டுவர இப்பொழுதே ஹிந்துவா இயக்கங்கள் திட்டமிட்டு கலவரங்களை நடத்த ஆரம்பித்து விட்டன. இதன் ஒருபகுதியாகவே ஒரு சாதாரண காதல் விவகாரத்தை வைத்து மூன்று பேரை அடித்தே கொன்றுள்ளது அத்தோடு விடாமல் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் 3 வரின் உயிரை குடித்த வெறி அடங்காமல் மேலும் கலவரத்தை தூண்டி பொது அமைதியை கெடுத்துள்ளனர்.
உ.பி.,யின், முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில், ஜாட் இனத்தை சார்ந்த இளம் பெண் ஒருவரை, கேலி செய்ததாக கூறி, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை தாக்கினர். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக மாறியது.
மற்ற மாவட்டங்களுக்கும், கலவரம் பரவியது. தீ வைப்பு, கத்தி குத்து, துப்பாக்கிச் சூடு என, முசாபர் நகர் மாவட்டம் முழுவதும், போர்க்களமாக மாறியது.இந்த கலவரத்துக்கு, நேற்று வரை, 31 பேர் பலியாகி விட்டனர். ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளிட்டோர், கலவர பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில், ராணுவத்தினர், கொடி அணிவகுப்பு நடத்தினர். ஆனாலும், கலவரம் கட்டுக்குள் வரவில்லை.நேற்றும், பல இடங்களில் கலவரம் நீடித்தது. கலவரத்துக்கு பயந்து, கிராம மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.
கலவரம் நடந்த பகுதிகளில் பணியாற்றிய, உயர் போலீஸ் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கலவரத்தை தூண்டும் வகையிலான வீடியோ காட்சிகளை, இணையதளத்தில் வெளியிட்டதாக கூறி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், குகும் சிங், சுரேஷ் ராணா, பர்தேந்து, சங்கீத் சோம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்., முன்னாள் எம்.பி., ஹரேந்திராவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து, கலவரத்தில் ஈடுபட்ட 1,000 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவர பகுதிகளில், போலீசார், வீடு வீடாகச் சென்று, சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கத்திகள், துப்பாக்கிகள் உட்பட, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
3 comments:
india should ban rss and it's other wings like bjp,vhp etc..
உங்களது கட்டுரை ஒரு தலைப்பட்ட்சமாகவே எழுதப்பட்டுள்ளதாக எண்ணத்தோன்றுகிறது. அது என்ன 1000 இந்து பயங்கரவாதிகள். இந்துக்களிலும் சரி முஸ்லீம்களிலுல்ம் சரி தீவிரவாத மத பற்றாளர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அது என்ன 1000 இந்து பயங்கரவாதிகள் கைது. அப்படியாயின் அவர்களை யாரும் முஸ்லீம் தீவிரவாதிகள் எதிர்க்கவில்லையா? எதிர்க்காமலா கலவரமாயிருக்கும். ஆனால் அழகாக அதை மறைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். நேர்மை எல்லா இடத்திலும் வேண்டும்.
அந்த இளம் பெண்ணின் சகோதரன் கொள்ளபட்டானே அதை ஏன் குறிப்பிடவில்லை? இப்படி ஒரு தலை பட்சமாக விஷம் வைத்து எழுதுவது ரொம்ப நேர்மையான ஒன்று என நினைப்பா?
Post a Comment