Sep 3, 2013

அரசியலில், ஆன்மீகத்தில் நுழையும் கிரிமினல்களுக்கு பாதுகாப்பா?


செப் 04: பிரபல சாமியார் ஆசாராம் கைது செய்யப்பட்டு 14 போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், விஜபிக்களுக்கான பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
விஐபிக்களுக்கான பாதுகாப்பை குறைப்பது குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் போதைப் பொருள் விற்பது போன்ற ஏதேனும் ஒரு தவறான வழியில் பணம் சம்பாதிப்பது, பிறகு அவர்கள் அரசியலிலோ ஆன்மிகத்திலோ நுழைந்து ஏராளமான சொத்துக்களை சேர்த்து, பிரபலமாகிவிடுகின்றனர்.

மோசடி நபர்கள், குற்றவாளிகள், பிரபலமானவர்கள் என்பதாலேயே அவர்களுக்கு விஐபிக்களுக்கான பாதுகாப்பு அளிப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது குறித்து வரும் 26ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: இன்று அரசியலிலும், ஆன்மீகத்திலும் நுழைந்திருப்பதில் பெரும்பான்மையோர் கேடிகளும், கிருமினல்களுமே என்பதற்கு உடச்ச நீதி மன்றத்தின் இந்த கேள்வியே சரியான சவுக்கடி. இப்பொழுதாவது மக்கள் போலி சாமியார்களை, அரசியல்வாதிகளை கண்டு ஏமாறாமல் அவர்களை புறக்கணிப்பார்களா? இந்திய மக்கள் விரோத அரசுகள் இதுபோன்ற போலிகளுக்கு கொடுக்கும் பாதுகாப்பை திருப்ப பெறுமா?
ஜோத்பூர்: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஜோத்பூர் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் போலீஸ் விசாரணக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர் இந்தூர் சென்றுவிட்டார். அங்கு அவரை கைது செய்த போலீஸார் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் ஜோத்பூர் கொண்டு வந்தனர்.
முன்னதாக, இந்தூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவக் குழு, ஆசாராம் பாபுவின் உடல்நிலையை பரிசோதனை செய்தது. பயணம் செய்யவும், விசாரணை நடத்தவும் அவர் உடல் தகுதியை பெற்றிருப்பதாக, மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தனர். இதையடுத்தே அவர் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டு, பின்னர் மற்றொரு விமானம் மூலம் ஜோத்பூர் அழைத்து வரப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து, ஜோத்பூர் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் சதீஷ் ஜாங்கிட் தலைமையில், ராஜஸ்தான் மாநில போஸீஸாரின் பாதுகாப்புடன், ஆசாராம் பாபு ஜோத்பூர் அருகேயுள்ள மேண்டூர் ஆயுதப் படை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு எதிராக சிலர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜோத்பூர் விமான நிலையத்திலும், விசாரணை நடந்த ஆயுதப் படை முகாம் வளாகத்திலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு ஆசாராம் பாபுவிடம் சுமார் 4 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஒரு நாள் போலீஸ் காவல்
விசாரணைக்குப் பிறகு ஆசாராம் பாபு, மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி (ஊரகம்) மனோஜ் கே. வியாஸ் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆசாராம் பாபுவுடன் பா.ஜ.க. தலைவர்களுக்கு தொடர்பு என்று திக்விஜய் சிங் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் சிறுவர்கள் இருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விசாரணையை முதல்வர் நரேந்திர மோடி வெளியுலகுக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88/#sthash.2Kdv4a3G.dpuf

2 comments:

Seeni said...

unmaithaan...

ADMIN said...

கண்டிப்பாக திரும்ப பெறாது.. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்...ஒருவருக்கு காவி உடை... மற்றவருக்கு வெள்ளை உடை... அவ்வளவுதான் வித்தியாசம்..

எனது தளத்தில் இன்றைய பதிவு இது.

சுட்டி; புதிய "டெராபைட் இன்டர்நல் மெமரி" கிராஸ்பார்..!