Sep 6, 2013

இந்தியாவுக்கு சுதந்திரம்! தமிழர்களுக்கு சுதந்திரம் எப்பொழுது?

செப் 07: உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க கோரி  மதுரையில் இருந்து சென்னையை நோக்கி எஸ்.டி.பி.ஐ வழக்கறிஞரணி சார்பாக  செப்டம்பர் 4,5,6 ஆகிய தினங்களில் பேரணி நடை பெற்றது.

சிந்திக்கவும்: இந்தியாவுக்கு 1947 சுதந்திரம் கிடைத்து விட்டது ஆனால் தமிழனுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை. தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலமா? என்று கேட்டுக்கும் அளவுக்கு தமிழர்களின் உரிமைகளை இந்திய அரசு புறம் தள்ளுகிறது.

தமிழ் நாட்டில் தமிழில் வழக்காட உரிமை வேண்டும் என்று போராடும் அளவுக்கு தமிழர்களின் நிலை இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு அலுவுலக படிவங்களை ஆங்கிலமும், ஹிந்தியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சுண்டைக்காய் இலங்கை அரசு தமிழக மீனவர்களை பல நூற்று கணக்கில் கொன்று குவித்த பிறகும் இந்தியா மவுனம் காக்கிறது.இதுதான் சுதந்திர இந்தியாவில் தமிழர்களின் நிலை. இன்னும் இந்தியாவுடன் தமிழர்களுக்கு என்ன வேலை. புரிந்து கொள்ளுமா தமிழினம்.

No comments: