Jun 2, 2013

நக்சலைட்டுகள் தீவிரவாதிகளா?

ஜூன் 2/2013: தமிழகத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணித்து தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
பெரியகுளம், காங்கேயம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 

இப்போது பரவக்கூடிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருந்தால், சத்தீஸ்கர், ஆந்திரா போன்ற மாநிலங்களை விட மிக மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிடும். நக்சலைட்கள் விவகாரத்தில் மத்திய அமைச்சர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. நக்சலைட்கள் தீவிரவாதிகள் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்க வேண்டும்.

சிந்திக்கவும்: நக்சலைட்கள் யார்? அவர்கள் தீவிரவாதிகளா அல்லது மக்கள் நண்பர்களா என்பதை பொதுமக்கள் தெளிவாக அறிவார்கள். நக்சலைட்கள் ஏதோ வெளிநாட்டில் இருந்து அல்லது வேற்று கிரகத்தில் இருந்து குதித்தது போல் புலம்புகிறார் தமிழக பாரதிய ஜனதா தலைவர்.

தமிழக மக்கள் பிரச்சனைகளில் எதற்காவது வாய் திறந்திரிப்பார்களா இந்த ஹிந்துத்துவா கோட்டான்கள்.  கூடங்குளம் அணு உலை பிரச்சனை, ஈழத்தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை என்று அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக  முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர்களே இந்த வர்ணாசிரம கூட்டத்தினர்.

*நக்சல் பாரிகள் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட ஒவ்வொரு குடிமகனின் நியாயமான குரலே* 

* மலர் விழி *

1 comment:

Anonymous said...

Thеre is definately a great deal to κnow аbout this subјect.
I loνe all of the points you mаde.

Check out my weblog carpet cleaning phoenix az