Jun 1, 2013

தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத போர்!

ஜூன் 01/2013: தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கச்சத்தீவு பகுதியில் இலங்கையின் போர் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் கெடுபிடி தொடர்வதால், மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகம், ராமேஸ்வர மீனவர்கள் முழு அளவில் மீன்பிடிக்கும் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு சொந்தமான கட்ச்சத்தீவு பகுதிகளில் அதிக அளவில் மீன்கள் காணப்படும். இலங்கையின் அச்சுறுத்தலால் இதை பிடிக்க முடியாமல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கட்ச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற சுமார் 1,500 விசைப் படகுகளின் மீனவர்கள் இலங்கை போர்க்கப்பலை பார்த்ததும் அதிர்ச்சியில் வெறும் கையேடு திரும்பினர். இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் பல மீன்பிடி கிராமங்களின் வாழ்க்கை கேள்வி குறியானது. 

வைக்கோ பிரதமருக்கு கடிதம்: கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். 

பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும்  கொல்லப்பட்டும்  வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தப்பட்டு, வலைகள்  அறுத்து எறியப்படுகின்றன. இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால், மிருகத்தனமாகத் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர். 

இந்தியக் கடற்படை, தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வில்லை. கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது. தமிழக மீனவர்களின் உரிமைநலன்களைப் பறிக்கின்ற வகையில் இதை 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. அதற்காக, இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை.

இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். `கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றம், அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில், தற்போது, கச்சத்தீவு அருகே, இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

3 comments:

Seeni said...

kodumai....

ruban said...

இதற்கு முடிவு தான் என்ன????????

Anonymous said...

இதுக்கு முடிவு தங்களுடைய எல்லைக்குல் இருந்து மீன் பிடிப்பதுதான்.

அடுத்தவன் சொத்தைத் திருட முயன்றால் இதுதான் நடக்கும்.