ஜூன் 04/2013: யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிராக கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஒப் இந்தியா என்கிற இயக்கத்தின் சார்பாக சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பல இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளத்தால் கேரள தலைநகர் திருவனந்த புரம் ஸ்தம்பித்தது.
சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது. யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ்பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது.
கண்டன மாநாட்டில் ஆல் இந்தியா மில்லி கவுன்சில், எஸ்.டி.பி.ஐ கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக, அரசியல் கட்சிகளும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆ. கிலானி, பேராசிரியர் ஜக்மோகன் சிங் (சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்.
*உலகில் சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதும் நாடுகள் இந்தியா, இலங்கை என்று தைரியமாக சொல்லலாம்*
1 comment:
vethanai...
Post a Comment