ஏப்ரல் 11/2013: ரோஜாக்களின் தேசமாக இருந்த காஷ்மீரின் மண் இன்று குறுதியில் சிவந்து கிடக்கிறது. காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள இந்திய ராணுவத்தால் அந்த மக்கள்படும் இன்னல்கள் எண்ணில் அடங்காதவை.
1947ஆகஸ்டு மாதம் சுதந்திரம் அடைந்த நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டும் அல்ல காஷ்மீரும்தான் சுதந்திரம் அடைந்த காஷ்மீரை அபகரிக்க பஸ்தூன் பழங்குடியினரைக் கேடயமாக வைத்து பாகிஸ்தான் புகுந்தபோது அவர்களை எதிர்கொள்ள முடியாத அப்போதைய காஷ்மீரின் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
"இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது, ஆகையால் காஷ்மீரை எங்களுடன் இணைத்து விட்டால் இந்தியா உங்களுக்குத் தேவையான ராணுவ உதவிகளையும் செய்யும் என்றார் வல்லபாய் பட்டேல். அதன் அடிப்படையில் 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி ஒரு ஒப்பந்தம் (Instrument of Accession) கஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு, வெளியுறவு போன்ற சில துறைகளைத் தவிர ஏனைய அனைத்தும் காஷ்மீர் அரசின் வசமே இருக்கும். போர் முடிந்தவுடன் ஐ.நா சபையின் மேற்பார்வையில் ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது முன்பு போல் தனிநாடாக இருப்பதா என்பதை பற்றி காஷ்மீர மக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று இந்தியா உறுதி அளித்தது. ஆனால் அந்த உறுதி இன்றுவரை நிறைவேற்றப்பட வில்லை.
காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் இன்றுவரை இந்தியா ஏமாற்றி வருகிறது. இன்று காஷ்மீரிலே நிற்கும் இராணுவ, துணை இராணுவப் படையினரின் எண்ணிக்கை சுமார் 7 இலட்சம் பேர். இந்திய கொலைகார ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 68,000 பேர். இதுவரை 10,000க்கும் அதிகமானோரை காணவில்லை. 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் சித்திரவதையால் ஊனமாகி இருக்கிறார்கள். காஷ்மீரிய பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வுகள் எண்ணிலடங்காதவை.

இந்திய, பாகிஸ்தான் பயங்கரவாத அரசுகளுக்கு காஷ்மீர் சொந்தமானதில்லை. காஷ்மீர் ஒரு தனி நாடு என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
No comments:
Post a Comment