Apr 15, 2013

ஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது!

மது: தீமைகளின் உறைவிடம்.  இது நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று பல கேடுகளை உண்டாக்குகிறது.   

இது உண்டாக்கும் நோய்கள்: உணவு குழாயை அரிக்கிறது, ஜீரண உறுப்புகளின் ஆற்றலை குறைக்கின்றது, வயிற்றில் புண்ணை  ஏற்படுத்தி, இதுவே பிற்காலத்தில் புற்று நோய் உண்டாக காரணமாக மாறுகிறது.

மேலும், கலீரல் பாதிப்பை உண்டாக்கி, மூளையை செயலிழக்க செய்கிறது, இதயத்தை வலுவிழக்க செய்கிறது, ரத்த குழாய்களை சேதமடைய வைக்கிறது, மறதியை உண்டாகிறது.  இப்படி படிப்படியாக மனிதனை கொல்லும் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

கஞ்சாவா & சாராயம்: உண்மைகள் இப்படி இருக்க குடி பழக்கத்தை உரம் போட்டு வளர்க்கிறது நமது அரசாங்கங்கள்.  மாநில அரசாங்கங்கள் தங்களது கஜானாவை நிரப்ப மதுவை ஆறாக ஓட அனுமதித்துள்ளது.

அரசு மதுவை வீடுகளில் அடுக்கி வைத்திருந்தால் தண்டனை இல்லை. அதுவே 10 கிராம் கஞ்சாவை வைத்திருந்தால் 10 வருடம் சிறை தன்டனை. கஞ்சாவால் உடலுக்கு பெரிய கெடுதி கிடையாது. ஆனால் சாராயம் உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் அழிக்க கூடியது.

கஞ்சாவை விட மிக பெரிய அளவில் கேடு உண்டாக்கும் சாராயத்திற்கு சட்டப்படி அனுமதி. குறைந்த தீமையை உண்டாக்கும் கஞ்சாவுக்கு 10 வருடம் சிறை தண்டனை என்றால் உயிரை குடிக்கும் சாராயத்திற்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும். இதில் இருந்து என்ன தெரிகிறது மக்கள் நலம் எல்லாம் இவர்களுக்கு முக்கியம் இல்லை வருமானம்தான் முக்கியம். இந்த வருமானத்தை வைத்து இலவசங்களை வீசி ஓட்டை பொறுக்க வேண்டும். இதுவே இவர்களது திட்டம்.

இப்பொழுது இன்றைய செய்தியை படியுங்கள்: உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம்  மதுபானங்களின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. குவார்ட்டர் மதுபாட்டலின்  விலை ரூ.50 ஆக உயர்ந்தது. ஆனால், அண்டை மாநிலமான அரியானாவில் ரூ 30–க்கு குவார்ட்டர் கிடைக்கிறது.

இதனால் உத்தரபிரதேச ‘குடிமகன்’கள், அரியானாவுக்கு சென்று மது வாங்க தொடங்கினர். சிலர் அரியானாவில் இருந்து மதுவை கடத்தி வந்து உ.பி.யில் விற்க தொடங்கினர். சிலர் கலப்படம் செய்தும் விற்க தொடங்கினர். 

மிக கேவலமான ஐடியா: இதனால் UP அரசு நேற்று மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இப்பொழுது  குவார்ட்டர் மது பாட்டில் ரூ.25 ஆக  குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அரியானா மாநில எல்லை யோரத்தில், குறிப்பிட்ட மதுக்கடைகளில் மட்டும் இந்த மது கிடைக்கும். இதன்மூலம், மது கடத்தல் குறையும் என்று ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிந்திக்கவும்: ரொம்ப கேவலமான ஐடியா! இதுபோன்ற ஐடியாக்களை செய்ய  ரூம் போட்டு யோசிப்பார்கள் போல இருக்கு. மதுவை ஒழித்து மக்களை காப்பதை விட்டு மலிவு விலை மது கொடுக்கிறார்களாம். அண்டை மாநிலத்தில் இருந்து மதுவை கடத்தி விற்கிறார்கள் என்று அதை தடுக்க இவர்களே குறைந்த விலை மது கொடுக்கிறார்கள். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு. இந்த நிலைமையில் போனால் வல்லரசு இல்லை ஒரு புல்லை கூட புடுங்க முடியாது.

4 comments:

Seeni said...

ennaththa solla...!?

VANJOOR said...

குடியைக் கெடுக்கும்!

குடி குடியைக் கெடுக்கும் என்று ஒரு பக்கத்தில் விளம்பரம் - வெகு தூரம் போவானேன்?

டாஸ்மாக் கடைகளில் கூட இந்த விளம்பரப் பலகை தொங்கும்.

அந்த விளம்பரப் பல கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே ஒரு பிடி பிடிப்பார்கள்.

டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் எனும் பணியாளர்கள் உண்டு.

அவர்களின் பணி என்ன தெரியுமா?

மது விற்பனையை அதி கப்படுத்துவது!

புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதுதான்; ஒரு மாதத்துக்கு இவ்வளவு இலக்கு என்று நிர்ணயிக் கப்பட்டு அதற்கான பணம் அரசின் கல்லாப் பெட்டியில் நிரம்பியாக வேண்டும்.

இன்று ஏடுகளில் ஒரு சுவையான செய்தி வெளி வந்துள்ளது.

2012-2013ஆம் ஆண்டுக்கான மது விற்பனை ரூ.25 ஆயிரம் கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாம். ஆனால் இந்த இலக்கை எட்ட முடியவில்லையாம்.

தீபாவளி, பொங்கல் நாட்களில்கூட இலக்கை எட்டிப் பிடிக்க முடிய வில்லையாம். (குடிமக்கள் திருந்தி விட்டார்களோ!)

மேலிடத்திலிருந்து குடைய மாட்டார்களா? மேலதிகாரிகள் அந்தக் குடைச்சலை, தன் கீழ் இருக்கும் அதிகாரிகளுக்குத் தானே மாற்றுவார்கள்?

இப்படி குடைச்சல் மேலிருந்து கீழ் மட்டம் வரை அதிரடியாக நடந் துள்ளது. அதன் விளைவு 242 மேற்பார்வையாளர் கள் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்சன்) செய்யப்பட்டுள்ளனராம்.

ஒரு பக்கத்தில் குடிகுடியைக் கெடுக்கும் என்று அரசு விளம்பரம்! இன்னொரு பக்கத்தில் குடியை ஏன் பெருக்கவில்லை என்று கூறி ஊழியர்கள் பணி நீக்கம்.

நிதானமாகத்(?) தான் இத்தகைய ஆணைகள் பிறப்பிக்கப் படுகின்றனவா?

பண வருவாய் அதிகம் தேவை என்ற போதை தலைக் கேறியதால்தான் இத்தகைய நடவடிக்கை களுக்குக் காரணமாக இருக்கலாமோ!

அரசன் வருவாயைப் பெருக்கிக் கொள்ள கோயில் கட்ட வேண்டும் என்று அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யன் எழுதினான் என்றால் இந்தக் குடியரசு காலத்தில், அரசின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள குடிகளைப் பெருங் குடி மக்களாக்கி குடியைப் பெருக்கி வருமானத்தை வளர்த்து குடி வோம்ப வேண்டுமோ!

பேஷ், பேஷ்!! மது ரமான திட்டம்தான்! - மயிலாடன்.

SOURCE: VIDUTHALAI.COM

Anonymous said...

kudi kudiyai kedukkum yenru solliye makkalai kolkiraargal

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

சாராயத்தை அரசாங்கமே விற்கலாம் என கடந்த அரசுக்கு முந்தன அரசை எந்த பொறம்போக்கு சொல்லி இருப்பான். அந்த பன்னாடைக்கு நல்ல சாவே வராது.