Jan 3, 2013

90 வயதிலும் பொய்யான சூளுரை!

Jan 04: நடக்க இருக்கும் திமுக  உட்கட்சித் தேர்தலில், தி.மு.க., தலைவர் பதவிக்கு, ஸ்டாலின் போட்டியிடுவதாக இருந்தார். இவரது எண்ணத்திற்கு  கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார்.

ஸ்டாலினுக்கு இப்போதைக்கு தலைவர் பதவி இல்லை. வாழ்நாள் முழுவதும், தமிழ் சமுதாய  மேன்மைக்காக நான் பாடுபடுவேன் எனக்கு பின், ஸ்டாலின் பாடுபடுவார் என கருணாநிதி அறிவித்தார்.

சிந்திக்கவும்: பண்டாரம் பரதேசியாக அரசியலுக்கு வந்து தமிழ் நாட்டை கொள்ளையடித்து ஆசிய பெரும் பணக்கார்கள் வரிசையில் வந்து விட்டது கருணாநிதியின் குடும்பம்.

ஜூன் 3ம் தேதி,தனது 90வது பிறந்த நாளை கொண்டாடும் கருணாநிதிக்கு ஒருபுறம் தலைவர் பதவியை விட்டு விலக மனதில்லை. மறுபுறம் தான் தலைவர் பதவியை விட்டு விலகினால் தன் கண்ணெதிரேயே திமுகவில் உள்கட்சி சண்டை வந்து உடைந்து போகும் நிலை வரலாம். இதை எல்லாம் தான் உயிரோடு இருக்கும் போது பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறார் தமிழ் ஈனத்தலைவர் கருணாநிதி.

தனது மகன்கள் தன் கண்ணெதிரேயே சண்டையிட்டு கட்சி உடைத்து விடகூடாது,  தான் சந்தோசமா பதவியோடு எந்த பிரச்சனைகளையும் பார்க்காமல் போயி சேரவேண்டும். அதனால்தான் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் சமுதாய மேன்மைக்காக பாடுபடுவேன் என்று சொன்னது.  அதற்கும், இவருக்கு பயன்படுவது தமிழும், தமிழ் மக்களும்தான்.

தமிழ், தமிழ் சமுதாயம் என்று சொல்லி அரசியல், அதிகாரம், பணம், என்று எல்லா வளங்களையும் பெற்றவர். ஆனால் அந்த தமிழர்களுக்காக தனது வாழ்நாளில் எதையாவது உண்மையாக செய்யவேண்டும் என்று நினைத்தாரா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தன்னையும் தனது குடும்பத்தையும் வளப்படுத்தி கொள்ள நல்ல அரசியல் நடத்தினார்.

தமிழகம் சந்தித்த மிக கேவலமான அரசியல் தலைவர்களுள் இவரும் ஒருவர்.

1 comment:

Anonymous said...

சர்க்காரியா கமிசன் விஞ்சான ரீதியாக ஊழல் செய்பவர் கருணாநிதி என்று அன்றே படிப்பறிவில்லாத கருணாநிதி ஊழல் செய்வதில் அதி நவீன ஊழல்வாதி என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டதே. இது போதாதா எங்கள் தங்க தலைவன் கருணா நீதி யார்? என்பதை விளங்கி கொள்ள முடியலையா?