Dec 24: டெல்லியில் பேருந்தில் பல்கலைக்கழக மாணவியை கற்பழித்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த வழக்கில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் டெல்லியின் முக்கிய அரசு அலுவுலங்கள் முன்னாள் வரலாறு காணாத அளவுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்களால் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
குடியரசு தலைவர் மாளிகைக்கு முன்னால் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டி குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். குடியரசு தலைவர் என்கிற பொம்மையின் மாளிகைக்குள் நுழைவதால் எந்த பயனும் இல்லை என்று.பாவம் மக்களுக்கு புரியவில்லை.
மக்கள் ஜனநாயக அடிப்படையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் நமது பயங்கரவாத போலீஸ்க்கு பொறுக்குமா! உடனே தண்ணீர் பீய்ச்சி அடித்தனர், கண்ணீர்ப் புகை, தடியடி பிரயோகம் என்று அராஜகத்தில் இறங்கினர். அதுமட்டுமல்லாது டெல்லியின் பல பகுதியில் நடந்த போராட்டத்திலும் இந்த போலீஸ் பொறுக்கிகள் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் கற்பழிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலை தேறிவருவதாகவும், அவர் செயற்கை சுவாசக் கருவியின்றி, தானாகவே சுவாசிக்கிறார் என்றும் தண்ணீரும், ஆப்பிள் பழரசமும் அருந்தினார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் பூவை கசக்கி எறிந்தவர்களை அரபு நாடுகளில் மக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது போல் வெட்ட வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற கொடூர செயலில் ஈடுபட கொடியவர்கள் அஞ்சுவார்கள்.
*மலர் விழி*
2 comments:
யாரை குறை சொன்னாலும், குறை கூறினாலும் பெண்கள் தங்களை பெண்களுக்கென்று வகுத்த கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாத வரை இது போன்ற சம்பவங்கள் நிகழும் என்பதில் ஐயமில்லை.
இதற்காகவே இஸ்லாம் வகுத்த ஹிஜாப் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் முக்கியமான ஒன்று என்பதை இது போன்ற சம்பவங்கள் மேலும் மேலும் வலியுறுத்துகிறது. உண்மையை சொல்ல வேண்டும் எனில் எத்தனையோ பேர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்பது ஓர் அடக்குமுறை, அடிமைத்தனம், சுதந்திரமற்றவை என்று கூச்சல் போடுகின்றனர். உண்மையில் ஹிஜாப் என்ற ஆபாசம் அற்ற கவசத்தை உடையாகவும் வாழ்வியல் நெறியாகவும் அணிந்து, அடக்கத்தை கையாண்ட எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பரிதாபம் ஏற்பட்டதில்லை என்பதே உண்மை.
மேலும் காண.....http://www.islamiyapenmani.com/2012/12/delhi-gang-rape.html
may peace be upon you miss malarvili i welcome your way of thinking thank you..
Post a Comment