’Dec 23: ’சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து, சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டிவரும் கட்டடத்தை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதியின் சுயநலத்தை மக்கள் அறிந்து கொண்டார்கள். பாரதிய ஜனதா மதவாத கட்சி அதை ஆதரிக்க கூடாது என்பதை இவர் சொல்லித்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது. அதை மீண்டும் புணர் நிர்மாணம் செய்ய பல வழிகளில் முயற்சிக்கிறார். ஆனால் மக்கள் இவர் சொல்லும் எந்த விசயத்தையும் ஏற்று கொள்ள தயாராக இல்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் ’’சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டி கொள்ளும் கருணாநிதி நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து நடந்த வாக்கெடுப்பில் தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களிக்கும்படி பணித்தார்.
பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். 1999 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கூட்டணியில் தான் நமது தமிழ் ஈனத்தலைவர் கருணாநிதி இருந்தார் என்பதை மக்கள் மறந்து விடவில்லை.
அடுத்து பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து நிதி அமைச்சர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கிறான், உள்துறையை அழகிரிக்கு கொடுக்கிறேன் என்று சொன்னால் போதும் உடனே மதவாதம் எல்லாம் மாயமாக மறைந்து போயி பாரதிய ஜனதா கட்சியின் கால்களை நக்கி கொண்டு திரிவார் இந்த கொள்கை கோமான்.
தமிழர்களால் நேசிக்க பட்ட தலைவர் என்பது மாறி வெறுக்கபடும் தலைவராக மாறிபோனார்.
1 comment:
unmaithaan....
Post a Comment