Dec 14, 2012

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்!


Dec 16: அமெரிக்காவில் கனெக்டிகட் நகரை சேர்ந்த இளைஞன் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் நுழைந்து சுட்டதில் 18 குழந்தைகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
 
ரியான் லான்சர் என்கிற இருபது வயதான வெள்ளை நிற இளைஞன் தனது தாயார் வேலை செய்யும் கனெக்டிகட் நகரை சேர்ந்த சான்டி ஹுக் தொடக்கப்பள்ளியில் நுழைந்து தன் தாயாரை நெற்றி பொட்டில் சுட்டு கொன்றுள்ளான்.
 
பின்னர் அங்குள்ள மழலையர் வகுப்பில் புகுந்து குழந்தைகள் மீது சராமாரியாக சுட்டதில் 18 குழந்தைகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவனை சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து அமெரிக்க அதிபர் ஓபாமா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தற்போதுள்ள நிகழந்துள்ள சம்பவம் மிகவும் மோசமானது. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. குழந்தைகள் பலியான சம்பவம் தனது இதயத்தை சுக்குநூறாக உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் முதல் சினிமா வரை தொடரும் வன்முறை காட்சிகள். விடியோ கேம்கள் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது என்று வன்முறை நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டிருப்பது. தாய், தந்தையர் குழந்தைகளோடு நேரங்களை செலவிடாமல் அவர்களுக்கு தனி அறை ஒதுக்கி கொடுத்து அவர்கள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க கார்டூன்களையும், விடியோ கேம்களையும், வாங்கி கொடுத்து அவர்களை ஒருவித மன நோய்க்கு ஆளாக்குகிறார்கள்.

தாய், தந்தையர்களின் அரவணைப்பு இல்லாமல் விடியோ கேம்களின் துணையோடு வளரும் அமெரிக்க குழந்தைகள் ஒரு பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக உணர்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ப்படும் சின்ன பிரச்சைகளை கூட பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் மனதினில் போட்டு அழுத்தி அதுவே அவர்களை ஒருவிதத்தில் சைக்கோவாக மாற்றுகிறது. இதுவே அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் இது போன்ற துப்பாக்கி சூடுகளுக்கு மூல முதல் காரணம். பெற்றோர்களின் அரவணைப்பு இருந்தால் குழந்தைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.

அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் சுலபமாக துப்பாக்கிகளை வாங்கி விடலாம் என்பதால் இது போன்ற துப்பாக்கி சூடுகள் அடிக்கடி நடக்கும் ஒரு நாடாக மாறிப்போனது. ஒபாமா தெரிவிக்கும் வெற்று இரங்கலால், கவலையால் எந்த புண்ணியமும் இல்லை. முதலில் சர்வ சாதாரணமாக ஆயுதங்கள் விற்கப்படுவதை தடை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் போன்ற கூட்டு படுகொலைகள் அமெரிக்காவின் அன்றாட சோகங்கள் ஆகிப்போகும். அமெரிக்க அரசு சிந்திக்குமா?
*மலர் விழி*


3 comments:

suvanappiriyan said...

மற்ற நாடுகளில் ஆயுத விற்பனைக்காக மூக்கை நுழைப்பதை முதலில் நிறுத்திக் கொண்டு ஆப்கான், ஈராக் போரினால் மனநலம் பாதிப்படைந்த ராணுவ வீரர்களுக்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். பின்னாலில் அவர்களும் கண் மூடித்தனமாக கொலை செய்யும் அபாயம் உண்டு.

Unknown said...

ஒரு ஆயுத வியாபாரியான அமெரிக்கா தனது ஆயுதம் வியாபாரம நடக்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் ஒருவருக்கொருவரை மோதவிட்டு இருவரிடமும் ஆயுத வியாபாரத்தை நடத்திவருகிறது. தீய வழியில் பொருள் ஈட்டினால் அதை கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அதன் பின் விளைவுகள் தான் இது. முதலில் தனது நாட்டு பிரச்சனைகளில கவனம் செலுத்தட்டும். பிறகு மற்றவர்களுக்கு பஞ்சாயத்து செய்யலாம்.

Sathak Maslahi said...

தன் வினை தன்னைச் சுடும்.