Aug 1, 2011

காந்தி சிலையை உடைத்து ஹிந்துத்துவாவினர் அராஜகம்!

ஆக் 02, கோயம்புத்தூர்: ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவை சேர்ந்த பயங்கரவாதிகள் உடைத்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவின் பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன்(வயது 37) இன்னொரு தலைவரான மின்னல் நாகராஜ்(வயது 47) ,

ஆகியோரை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் கைது செய்தது. பாபா ராம்தேவை கைதுச் செய்த சம்பவத்தை கண்டித்து காந்திசிலையை உடைத்ததாக சிலையை உடைத்த பிறகு குற்றவாளிகள் சம்பவ இடத்தில் வீசிச்சென்ற துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிந்திக்கவும்: காந்திஜி சுதந்திரம் கேட்டு போராட்டம் நடத்தும் போது இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெள்ளையர்களோடு சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தார்கள். முஸ்லிம்கள் தங்களது இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக வேண்டி தங்களது விகிதாச்சரத்துக்கும் அதிகமாக போராடி உயர்நீத்தனர், சிறை சென்றனர். அது மட்டும் அல்லாமல் வெள்ளையர்கள் மீது கொண்ட வெறுப்பினால் ஆங்கிலம் வெள்ளையர்களின் பாஷை அதை கற்றுக்கொள்வது ஹராம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்று கூறி ஆங்கிலம் கற்றுக் கொள்ளாததனால் ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கி போனார்கள்.

ஆனால் இந்த பார்பன ஹிந்துத்துவாவோ வெள்ளையர்களுக்கு சாமரம் வீசி தங்களை வளர்த்து கொண்டார்கள். கடைசியாக காந்திஜியை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டு கொன்றான். பாவம் அந்த நல்லவரும் ராம் ராம் என்று சொல்லி மரணித்து போனார். காந்திஜியை கொன்றதற்காக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் மீண்டும் ஹிந்துத்துவா ஆதரவு படைத்த சில அரசியல், மற்றும் நீதி துறை கயவர்களால் அவர்கள் தடை நீக்கப்பட்டு மீண்டும் இந்தியாவில் கலவரங்களை நடத்தி வருகிறார்கள்.

4 comments:

Anonymous said...

நாட்டுக்கு நல்லது செய்து நல்ல பெயர் பெற்றார் காந்தி
நாட்டுக்கு அல்லது செய்து வன்மப் பெயர் பெற்றனர் வர்நாசிரமர்

தலைவனாக தன்னலம் துறந்தார் காந்தி
தலைவனாக பிறர் தலை எடுத்தனர் இந்துத்துவாவினர்

நீதிக்கு தலைவணங்கும் காந்திக்கு தலை இல்லை இன்று
இராமனை வணங்கி முடித்த உடனே அவர் உயிர் எடுத்தார் அன்று

ராமனும் காப்பாற்றவில்லை அவரை
நாடும் காப்பாற்றவில்லை.

தலைக்கணம் மிக்க இவரின் தலைக்கணம் குறைய
உபதேசம் அல்ல இவருக்கு தேவை தலை உடைத்து சிகிச்சையே

யாருக்கு வேண்டும் நீதி இங்கே? துன்மார்க்கர் தம் அநீதி அழிக்க
நல்லோர் ஓன்று சேர்வோம் இங்கே

- தலித் மைந்தன்

Anonymous said...

நீங்கள் எங்கள் இந்து மதத்தை கேவலப்படுத்தவெல்லாம் முடியாது. ஏனெனில் எங்கள் மதத்தில் எதுவும் நடந்த சம்பவங்களோ, நடந்ததாக ஆதாரமோ நிச்சயமாக கொண்டு வரமுடியாது.
எல்லாமே கற்பனையாய் மனித குளம் அமைதியோடு வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் எழுதி
விட்டு சென்ற மனித வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ராமாயணம், மகாபாரதம்,
திருவிளையாடல், தசாவதாரம் போன்றவை எல்லாம். அவற்றில் வரும் நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கொண்டு
மீதியை விட்டுவிடுங்களேன். ஏன் எங்களில் அறியாத மாந்தர் செய்யும் காரியங்கள் போல் நீங்களும்
பதிலுக்கு செய்கிறீர்கள். *** தமயந்தி ***

Anonymous said...

நாமும் அறிவோம் சகோதரி தமயந்தி. ஆனால், இந்து மதத்தின் பெயரால், நடந்ததுபோல் எல்லா காரியங்களையும் கற்பனை செய்து, இல்லாததை இருந்ததாக புகுத்தி, இருப்பதை இடித்து, 200 வருடங்களுக்கு ஒரு இனத்தையே அழிப்பதற்காக திட்டம் தீட்டி, அந்த திட்டத்தின் அடிப்படையை சொன்னவன் ஒரு கிருக்கத்தனமாய், கூட்டுக் கற்பழிப்பையும், பச்சிளம் பாலகர்களையும் கொள்வதையும் கூட தன் கொள்கை பாதையின் வழித்தடங்களாய் காட்டி இருப்பதையும் குறைந்த பட்சம் விமர்சிக்க கூட நீங்கள் அனுமதிக்கவில்லையானால் இதுவும் ஒரு வகையான பயங்கரவாதம் தான் சகோதரியே.

- தலித் மைந்தன்

Anonymous said...

www.tamilhindu.com, www.rss.org for more details pls visit