புதுடெல்லி:லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளார்.மஸ்ஜித் தகர்த்ததுத் தொடர்பாக அத்வானியின் பங்கு குறித்து மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்சுகுப்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லிபர்ஹான் கமிஷன் அறிக்கையில் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் உதவுவதற்கான விபரங்களை பரிசோதிக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தது. இதுத்தொடர்பாக ஆய்வறிக்கையும் கோரப்பட்டது.மஸ்ஜித் தகர்த்ததில் குற்றவாளிகளாக 68 நபர்களின் பெயர்களை லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பெயர்களையும் சேர்த்து விரிவான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க மத்திய அரசு சி.பி.ஐயிடம் வலியுறுத்தும் எனத்தெரிகிறது.
தற்ப்பொழுது லிபர்ஹான் கமிஷன் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் பங்கேற்ற குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கத்தியார், ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதாம்பரா ஆகிய எட்டுபேர் மட்டுமே சி.பி.ஐயின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்குகளை வேகமாக நடத்தவும் மத்திய அரசு சட்ட அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் நடத்திய சதித்திட்டங்கள், இதற்காக திரட்டப்பட்ட பணம் ஆகியவற்றைக் குறித்து கூடுதல் விபரங்களை சேகரிக்க உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ இயக்குநர் அஸ்வனிக்குமாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ராமஜென்மபூமி நியாஸ், பாரத் கல்யான் பிரதிஷ்டன், விசுவ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம ஜென்மபூமி நியாஸ், ஸ்ரீராம ஷீலா பூஜன், ஜன் ஹிதேஷி உள்ளிட்ட அமைப்பினரை குறித்தும் அவர்களுடைய வருமானத்தைக் குறித்தும் புலனாய்வு விசாரணை மேற்க்கொள்ளவும் மத்திய அரசு சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தேவையான பணம் பாதுகாப்பாக வைத்திருந்த வங்கிக் கணக்கை கையாண்ட 18 பேரைக் குறித்தும் புலனாய்வு விசாரணை மேற்க்கொள்ளவும் சி.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹந்த் பரமஹன்ஸ் ராமசந்திரதாஸ், கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உள்ளிட்டோர் இந்த 18 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment