"பி.ஜே.பி. பொதுக் கூட்டத்துக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கே... "போஸ்டர்ல 'வெங்காய நாயுடு பேசுகிறார்'னு போட்டுட்டாங்களாம்!"
"போலீஸ் வந்துருக்கு. ஏன் அவரும் ஸ்பெக்ட்ரம்ல ஊழலில் சம்பந்தப்பட்டிருக்காரா?" அட "நீங்க வேற! அவரு வீட்டுல தினமும் வெங்காய சாம்பார் பண்ணுறாராம்."
"பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு!" "வரதட்சணை நிறைய கேட்டாரா?" "இல்லைங்க... வெங்காய பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!
"பேங்க்லேர்ந்து பணம் எடுத்துட்டுத் திரும்பி வரும்போது கொள்ளைக்காரங்க என் கவனத்தைத் திசை திருப்ப, நடுரோட்டுல...." "ரூபாய்த் தாளைப் போட்டிருந்தாங்களா?" "இல்ல.... வெங்காயத்தப் போட்டு இருந்தாங்க!"
"உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பெரிய பணக்காரராமே?""ஆமாங்க.. வெங்காய வியாபாரி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment